கிண்டி மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம்.. இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு!

 
விக்னேஷ் - பாலாஜி

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை கடந்த மாதம் 13ம் தேதி விக்னேஷ் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் பலத்த காயம் அடைந்த டாக்டர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 19ம் தேதி வீடு திரும்பினார்.

இதனிடையே டாக்டரை கத்தியால் தாக்கிய இளைஞர் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள விக்னேஷ் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு கடந்த மாதம் 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​விக்னேஷுக்கு ஜாமீன் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இதையடுத்து, இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​இளைஞர் விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விக்னேஷ் ஜாமீன் பெற்றுள்ளார். மேலும், முறையான சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web