பதறிய மாணவி... சிகிச்சையில் டிரஸ்ஸைக் கழற்றிய மருத்துவர்... தர்ம அடி கொடுத்த உறவினர்கள்!

 
கல்லூரி மாணவி
 

விழுப்புரம் அருகே, மருத்துவ சிகிச்சைக்காக வந்த இளம் பெண்ணின் முன்பு ஆடைகளை கழட்டிய மருத்துவரை உறவினர்கள் அடித்து உதைத்து போலீஸில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விழுப்புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுகு தண்டுவடத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பிசியோதெரபி சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவர் அந்த மருத்துவமனைக்குச் சென்று பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். 


கடந்த 3-ம் தேதி வழக்கம் போல் சிகிச்சைக்காக அந்த மாணவி சென்றார். அப்போது பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற பிசியோதெரபிஸ்ட் சிகிச்சை அளிப்பதற்காக மாணவி இருந்த அறைக்குள் சென்று உள்ளார். அறைக்குள் சென்றதும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் தெரியக்கூடாது என்பதற்காக நான்கு புறமும் ஸ்கிரீன் அமைத்ததோடு, மாணவியை பாலியல் ரீதியாக உடலின் பல்வேறு பாகங்களிலும் சந்தோஷ் குமார் தொட்டதாக கூறப்படுகிறது. 

விழுப்புரம்

மேலும், அந்த மாணவியை திரும்பப் படுக்க வைத்துவிட்டு, தனது ஆடைகளை அவர் கழட்ட முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி சத்தமிட்டவாறே அறையில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டார்.


தொடர்ந்து தனது உறவினர்களுக்கும் அவர் செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மாணவியின் உறவினர்கள், சந்தோஷ் குமாரை பிடித்து தர்ம அடி கொடுத்து மருத்துவமனையில் இருந்து தரதரவென இழுத்துச் சென்று விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web