அதிர்ச்சி... கால் அறுவை சிகிச்சைக்காக சென்ற சிறுவனுக்கு விருத்தசேதனம் செய்த மருத்துவர்கள்!

 
கால் அறுவை சிகிச்சை


மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில்  துணை மாவட்ட மருத்துவமனையில் 9 வயது சிறுவன் கால் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தான். அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் தவறுதலாக விருத்தசேதனம் அறுவை சிகிச்சை செய்து விட்டனர். இது குறித்து அச்சிறுவனின் தாய் புகார் தெரிவித்துள்ளார். அவர் அந்த புகாரில்  “ஷாஹாபூரில்  பள்ளியில் எனது மகன் 4ம் வகுப்பு படித்து வருகிறான்.   என் மகன் பள்ளிக்குச் சென்று காலில் காயத்துடன் திரும்பி வந்தான்.
அவன் இது குறித்து  அவன் தன்னுடைய வகுப்பு தோழர்களுடன்  விளையாடும் பொழுது இடது காலில் தவறுதலாக கல் பட்டு காயம் ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனால் என் மகனை துணை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

கால் அறுவை சிகிச்சை

அங்கு என் மகனுக்கு,   சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் வீடு திரும்பிய பிறகு அதே  இடத்திலிருந்து சீழ் வெளியேற தொடங்கியது. எனவே, மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அவரை சிகிச்சை செய்த மருத்துவர் காயம் ஆழமாக பட்டுள்ளதால் இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறிவிட்டார்.  ஜூன் 15ம் தேதி, சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தோம் ஜூன் 17ம் தேதி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். திட்டமிட்டபடி அதே தேதியில்  அறுவைசிகிச்சை நடந்து ஆபரேஷன் தியேட்டரில் இருந்து என்மகனை வெளியே கொண்டு வந்தார்கள்.
மருத்துவர்கள்  காலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை மாற்றி, விருத்தசேதனம் செய்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.  இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட போது, அவர்கள் மீண்டும் உடனே என் மகனை உள்ளே அழைத்துச் சென்று சரியாக காலில் ஆபரேஷன் செய்தனர்.

மகாராஷ்டிரா

அலட்சியமாக இதே வயதில் வேறு சிறுவர்கள் இருந்ததால் குழப்பம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள்.அத்துடன் உங்கள் மகனுக்கும் ஆணுறுப்பில் தொற்று ஏற்பட்டிருந்தது. அதனால் அதான்  விருத்தசேதனம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் என்ன நல்லது தான் எனக்கூறி தவறை ஒப்புக்கொள்ளாமல் சமாளிக்கின்றனர்” என கூறினார்.இச்சம்பவம் குறித்து சிறுவனின் தாயார் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். தானே சிவில் மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் கைலாஸ் பவார் மேற்பார்வையில் விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. மருத்துவத்துறையின் இந்த அலட்சிய போக்கு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web