மருத்துவர்கள் தொடர் போராட்டம்.. உரிமம் ரத்து செய்யும் முடிவை வாபஸ் பெற்றது தென் கொரியா அரசு!

 
 தென் கொரியா

வயதான மக்கள்தொகை மற்றும் கிராமப்புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக தென் கொரியாவின் சுகாதாரத் துறை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது. இதை போக்க, 2035ம் ஆண்டுக்குள், மருத்துவ கல்லுாரிகளில், 10 ஆயிரம் இடங்களை அதிகரிக்க, அரசு முடிவு செய்தது.ஆனால், இவ்வளவு மாணவர்களை கையாள, போதிய சுகாதார கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே இது மருத்துவ சேவையை சீர்குலைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து சுமார் 8 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இது போராட்டத்திற்கு வழிவகுக்கு ம்மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தென்கொரிய அரசு எச்சரித்தது.

ஆனால் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து, மருத்துவர்களின் உரிமத்தை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சோ கியோவரங் தெரிவித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web