நாய் கடித்த சிறுமிக்கு மே 9ம் தேதி அறுவை சிகிச்சை! நாய்க்கு லைசென்ஸும் இல்லையாம்!?

 
சுதக்ஷா

சென்னையில் வளர்ப்பு நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கு வரும் 9ம் தேதி அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் மாதிரிப் பள்ளி சாலையில் அமைந்துள்ள பூங்காவில், காவலாளியின் 5 வயது மகளை அந்த பகுதியில் இருந்தவர் பூங்காவிற்குள் அழைத்து வந்த 2 வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறின. உடனடியாக நாய்களை அழைத்து வந்த புகழேந்தி என்பவர், அங்கிருந்து நாய்களைக் கட்டுப்படுத்தாமல் உடனடியாக அங்கிருது தப்பிச் சென்றார். அவரது 2 வளர்ப்பு நாய்களும் சிறுமியைக் கடித்துக் குதறிய நிலையில், சிறுமி அலறல் சத்தம் கேட்டு காப்பாற்றிய தாய் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன. பலத்த காயமடைந்த சிறுமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 5 வயது சிறுமியை கடித்துக் குதறிய ராட்வில்லர் வகை வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

நாய்

இந்நிலையில்  நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கு வரும் 9ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்து மருத்துவர்கள் வர வேண்டியுள்ளதால் வியாழக்கிழமை அறுவை சிகிச்சை என்றும்  பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது நன்றாக இருப்பதாகவும், உயிருக்கு ஏதும் ஆபத்தில்லை எனவும் சிறுமியின் தந்தை தகவல் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web