அட... நாய், பூனைகளுக்கு மேட்ரிமோனி... மாணவரின் அசத்தல் யோசனை!
இந்த காலத்தில இளைஞர்களுக்கே திருமணத்திற்கு மணப்பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது. ஒருவர் நாய்களுக்கு மேட்ரிமோனியல் தொடங்கியுள்ளார். இத்தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் அபின் ஜாய் மாணவர் இந்த வலைதளத்தை மேட்ரிமோனியலை தொடங்கியுள்ளார். அபின் ஜாய் செல்லப் பிராணிகளுக்கு துணை தேடுவதற்கு உதவியாக புதுமையான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். இதற்காக பிரத்தியேகமாக vet.igo.in என்ற இணையதளத்தையும் உருவாக்கியுள்ளார். இந்த இணையதளம் மூலம் நாய்களுக்கான துணைகளை கண்டறியலாம். விரைவில் பூனைகள் போன்ற மற்ற செல்லப் பிராணிகளின் துணையை கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வலைத்தளம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் இதன் மூலம் கால்நடை ஆலோசனைகளும் வழங்கப்படும். கேரளா மற்றும் பிற மாநிலங்களில் செல்ல பிராணிகளுக்கான முதல் ஆன்லைன் மேட்ரிமோனி வலைத்தளம் எனக் கூறியுள்ளார். இதில் செல்லப் பிராணிகளின் குறித்த அனைத்து விவரங்களையும் புகைப்படங்களையும் முதலில் பதிவிட வேண்டும். இதனால் அதற்கான சரியான துணையை தேர்ந்தெடுப்பது எளிமையாக அமையும். தற்போது இந்த வலைத்தளம் இலவசமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இதற்கான கட்டணம் மிகச்சிறிய அளவில் நிர்ணயம் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
