ஆட்டு தொழுவத்தில் புகுந்த வெறிநாய்கள்.. 40க்கு மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறிய கொடூரம்.. 15 ஆடுகள் பலி!

 
 பணகுடி ஆடுகள்

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். பணகுடி அருகே சைத்தம்மாள்புரத்தில் இவரது விவசாய தோட்டம் உள்ளது.இந்நிலையில் பணகுடியை சேர்ந்த கிருஷ்ணன், கண்ணன், மகேஷ் ஆகியோர் இவரது தோட்டத்தில் 250க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். நேற்று வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை இரவு தொழுவத்தில் அடைத்து வைத்தனர்.

இந்நிலையில், அங்கு அடைக்கப்பட்டுள்ள ஆட்டு கொட்டகைக்குள் 4க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் புகுந்துள்ளன. 40க்கும் மேற்பட்ட ஆடுகள் கடித்து குதறியதில் 15 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.  40க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தன. இச்சம்பவம் அப்பகுதி ஆடு வளர்க்கும் விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணகுடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஒரு ஆட்டின் விலை 10,000 முதல் 15,000 வரை செல்வதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆடு உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் 15 ஆடுகள் இறந்துள்ளதுடன், காயமடைந்த ஆடுகளில் மேலும் பல ஆடுகள் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெறிநாய்களை நகராட்சி நிர்வாகம் பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

 காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web