இனிமேலும் EVM மிஷினை குறை சொல்லாதீங்க... இந்திய வீராங்கனை ஹீனா சித்து கடும் கண்டனம்!

 
இனிமேலும் EVM மிஷினை குறை சொல்லாதீங்க... இந்திய வீராங்கனை ஹீனா சித்து கடும் கண்டனம்!

வாக்குப்பதிவு மிஷினைக் குறை சொன்னவங்க எல்லாம் எங்கே போனீங்க... இப்போ யாரும் மிஷினைக் குறை சொல்ல மாட்டீங்களே... இனிமேலும் வாக்குப்பதிவு மிஷினைக் குறை சொல்லாதீங்க... இந்திய தேர்தல் ஜனநாயக முறையில் நடைப்பெற்றுள்ளது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது என்று முன்னாள் உலகின் நம்பர் 1 துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்து அரசியல் கட்சிகளுக்கு ஆவேசமாக தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். 


 

மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் போது, ​​"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஎம்) பிரச்சனை என்றும், வாக்குச்சீட்டு நடைமுறை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்" என்றும் பிரச்சனையை முன்வைத்த அரசியல் கட்சிகளுக்கு முன்னாள் உலகின் நம்பர்.1 துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்து கண்டனம் தெரிவித்தார். 

இது குறித்து ஹீனா தனது ட்விட்டர்  பக்கத்தில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பிரச்சனை பற்றி இந்த முறை யாரும் அந்த பிரச்சினையை எழுப்ப மாட்டார்கள்? மேலும், “இந்திய ஜனநாயகம் வலுவாக இருக்கிறது என்பதை இந்தத் தேர்தல் காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web