உஷார்... சனிக்கிழமைகளில் மறந்தும் இந்த பொருட்களை வாங்கிடாதீங்க!

 
சனி பகவான்

சனிக்கிழமைகளில் மறந்தும் கூட இந்த பொருட்களை வாங்கிடாதீங்க... சில விஷயங்களை செய்வதை விட செய்யாமல் இருப்பதே நல்லது. சனிக்கிழமை என்றாலே பொதுவாக கையில்  நல்லெண்ணையுடன், எள்ளையும் எடுத்துக் கொண்டு சனீஸ்வரரை வழிபட கிளம்பிவிடுவார்கள்.  இத்துடன்  இனி சனிக்கிழமைகளில் மறக்காமல் எண்ணெய் தானமும் செய்து பாருங்கள். தொடர்ந்து  இதனை செய்து வர  துன்பங்கள் , கவலைகள் மறைந்து  ஆரோக்கியம் பெருகும். அத்துடன்  சனிக்கிழமைகளில் சில விஷயங்களை மறந்தும் செய்ய வேண்டாம் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள். இதனையும் கடைப்பிடித்தால் வாழ்வில் மங்கலம் பெருகும் என்பது ஜோதிட நிபுணர்கள் கூற்று.  

கத்திரிக்கோல்
அதன்படி சனிக்கிழமைகளில்  கத்தரிக்கோல் மற்றும் துடைப்பம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.   ஜோதிடத்தில் இப்படிச் செய்வது சரியல்ல என்று நம்பப்படுகிறது. இப்படிச் செய்வதால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அதிகரித்து  கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். அதே போல்   சனிக்கிழமைகளில்  உப்பு வாங்குவதும் அசுபமாகக் கருதப்படுகிறது.   இந்நாளில் உப்பு வாங்கினால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்கின்றது ஜோதிடம்.  அதே போல் சனிக்கிழமைகளில்   சனி பகவானை மகிழ்விக்க கடுகு எண்ணெயை வழங்கி வருகின்றனர்.  

இரும்பு அகல் விளக்கு

 

இந்நாளில் கடுகு எண்ணெய் வாங்குவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக கூறுகிறது ஜோதிடம் அதே போல் சமீபகாலமாக சனிக்கிழமைகளில் புதிதாக இரும்பு அகல் வாங்கி அதில் விளக்கேற்றி வருகின்றனர். இது மாபெரும்  தவறு. சனிக்கிழமைகளில்  இரும்பு பொருட்களை வாங்குவதால்  சனிபகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பது ஜோதிட நம்பிக்கை.  அதே போல் சனிக்கிழமைகளில்   கருப்பு ஆடைகள் மற்றும் காலணிகள் , நிலக்கரி சம்பந்தமான பொருட்களை வாங்குவதால்   சனி தோஷம் ஏற்படும். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web