உஷார்... தெரியாத நம்பரிலிருந்து வரும் புத்தாண்டு லிங்க்குகளை கிளிக் பண்ணாதீங்க!

 
வாட்ஸ் அப்

 இன்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பாதுகாப்பான மகிழ்ச்சியான புத்தாண்டை கொண்டாட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் செயலிக்கான ஆப் லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து  திருநெல்வேலி சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், இணையதளத்தில் தற்போது செயல்பட்டு வரும் புத்தாண்டு வாழ்த்து செயலி  மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

வாட்ஸ் அப்

 மோசடி நடைபெறும் விதம் எப்படி என்றால், உங்களது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும் அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்த apk file-ஐ ஓபன் செய்துவிட்டால் உங்களது போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும். மேலும் உங்களது வங்கிக் கணக்கு குறித்த அனைத்து தகவல்களும் அவர்கள்  தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்.

வாட்ஸ் அப்

 எனவே வாட்ஸ்-அப்பில் வரும் இதுபோன்று அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும். அந்த எண்ணிற்க்கு மொபைல் போன் மூலமாக அழைத்து விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதையும் மீறு  பாதிக்கப்பட்டால் உடனடியாக  சைபர் கிரைம் இணையதளமான cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் அளிக்கவும்” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!