வீட்டை விட்டு வெளியே வராதீங்க!! இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!!

 
மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்கள் உற்சாகமாக கோடைவிடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என அச்சத்தில் உள்ளனர். ஆனால் மக்களை குளிர்விக்கும் வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெயில் , மழை

அதில்  தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது.  இதனால் தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் அதாவது மே 4 மற்றும் 5ம் தேதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 6 மற்றும் 7ம் தேதிகளில்  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். புறநகர் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான  அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.  மே 6ம் தேதி  தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். மே 7ம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இதனால் இந்நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web