வெள்ளிக்கிழமைகளில் இதை மறந்தும் செய்யாதீங்க.. அப்புறம் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது!

 
பணம் ரூபாய் சம்பளம் சம்பள உயர்வு பர்ஸ் காசு

வாழ்க்கையில் ஒரு மனுஷனுக்கு நிம்மதி தான் ரொம்ப முக்கியம். எத்தனை பணம் இருந்தும் நிம்மதி இல்லை என்பவர்கள் இருக்கிறார்கள். சாப்பிடும் போது மட்டும் தான்  மனுஷன் வயிறு நெறஞ்சதும், போதும் என்று சொல்கிறான். ஒவ்வொரு கிழமைக்கும் தனித்தனியே விசேஷம் உண்டு. ஆகாத கிழமை, நாள், நட்சத்திரம், திதி என்று எதுவுமே கிடையாது. அஷ்டமி, நவமி சரியில்லை என்று புலம்புகிற நாம் தான் ராமி நவமியையும், கோகுலாஷ்டமியையும் கொண்டாடுகிறோம். ஆனால், ஒவ்வொரு நம்பிக்கைக்கும் ஒரு சக்தி உண்டு.

பொதுவாகவே வெள்ளிக்கிழமை பணவரவுக்கு ஏற்ற நாள். செல்வத்தின் கடவுளான லட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடித்து வர வேண்டும். பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு நிரந்தரமாகவே சென்று விடுவாள் என்பது ஐதீகம். அதே போல நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும்.

மறந்தும் வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!

  • வெள்ளிக்கிழமைகளில் மறந்தும் செய்யக் கூடாத விஷயங்கள் என்று நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களை வகுத்து வைத்திருக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் மறந்தும் செய்யாதீங்க… அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே இதையெல்லாம் நீங்க இதுநாள் வரையில் செய்து வந்திருந்தால், அதுவே கூட உங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இத்தனைக் காலங்களும் இருந்திருக்கலாம். எவ்வளவோ சம்பாதித்தாலும், பொருள் வீடு வந்து சேரலை.. நிரந்தரமாக செல்வம் தங்காமல் கடனில் தத்தளிக்கிறேன் என்று சிலர் புலம்புவதைக் கண்டிருக்கலாம். அதற்குப் பின்னால் இந்த மாதிரியான அஜாக்கிரதை காரணங்களாக இருக்கும்.
  • வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது கூடவே கூடாது. அதே போல் வெள்ளிக்கிழமைகளில் யாரிடமும் சென்று கடன் கேட்டும் நிற்காதீர்கள். உங்களுக்கு வரவேண்டிய செல்வம், வரவாகவே இருக்கட்டும். கடனாக இருக்க வேண்டாம்.
  • வெள்ளிக்கிழமைகளில் அரிசியை வறுப்பதும், புடைப்பதும் கூடாது. குறிப்பாக பச்சரிசியை அஜாக்கிரதையாக கையாளாதீர்கள். பச்சரிசியில் லட்சுமி வாசம் செய்கிறாள்.
  • வெள்ளிக்கிழமைகளில் பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் இரண்டுமே கூடவே கூடாது.

மறந்தும் வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செய்யவே செய்யாதீங்க!

வெள்ளிக்கிழமைகளில் பால் பொங்கி கீழே வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.

விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக் கூடாது.

காலை அல்லது மாலை நேரங்களில் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, விளக்கேற்றக் கூடாது.

வெள்ளிக்கிழமைகளில் நகம், முடி போன்றவற்றை வெட்டக் கூடாது.

பூஜையின் போது, விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. இதை எல்லா நாளிலுமே கடைப்பிடிக்கலாம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யவே செய்யாதீங்க.

துண்டைக் கட்டிக் கொண்டோ, துண்டை தோளில் போட்டுக் கொண்டோ, ஈர ஆடைகளுடன் சாமி கும்பிடக் கூடாது.

தேங்காயை, பூஜைக்கு படைக்கும் போது, உடைக்கும் சமயத்தில் எதிர்பாரா விதமாக இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைத்தால், அவற்றை எக்காரணம் கொண்டும் சாமிக்கு படைக்கக் கூடாது.

இயற்கை பூக்களுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பூக்களையும், மா மற்றும் தென்னை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் தோரணங்களையும் கட்டுதல் கூடாது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web