இப்படி பண்ணாதீங்க... நூடுல்ஸ் சாப்பிட்டதில் இளைஞர் உயிரிழப்பு!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருப்பதில் எத்தனை அர்த்தம் பொதிந்துள்ளது. நாம் தான் அந்த வாக்கியங்களின் அர்த்தங்களைப் புரிந்துக் கொள்வதில்லை. அளவுக்கு அதிகமாக தொடர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் திருபுகழ் தெருவில் வசித்து வருபவர் 24 வயது மனோஜ் குமார். விழுப்புரத்தில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 3 நாட்களாக வயிற்று போக்கு இருந்த நிலையில், இரவு அளவுக்கு அதிகமாக நூடுல்ஸ்சை விரும்பி உட்கொண்டுள்ளார்.
இதனால் இரவு மூச்சுத்திணறல் ஏற்படவே அருகிலுள்ள விழுப்புரம் தலைமை மருத்துவமனையான முண்டியம்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இளைஞரின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை ஆய்வு செய்த போது இளைஞர் 3 நாட்களாக வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் தொடர்ந்து வயிறு முட்டும் அளவிற்கு நூடுல்சை சாப்பிட்டதால் செரிமானம் ஆகாமல் இளைஞர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
மூச்சு முட்டும் அளவிற்கு இளைஞர் நூடுல்சை உட்கொண்டு செரிமானம் ஆகாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!