உஷார்... குளிர்பானங்களை குடிக்காதீங்க.... மூளைப்பாதிப்பு ஏற்படலாம்!

 
குளிர்பானங்கள்

 கோடை வெயிலுக்கு எதாவது ஜில்லென சாப்பிடவும், குடிக்கவும் அனைவருக்குமே ஆசை தான். அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை குளிர்பானங்களை விரும்பாதவர் எவரும் இல்லை எனலாம். இந்த காலகட்டத்தில் கண்ணில் படும் கலர் கலர் குளிர்பானங்களை வாங்கி வாயில் சரித்து கொள்வதில் அலாதிப் பிரியம். இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  
குளிர்பானங்கள் குடிப்பது ஆரோக்கியத்தில் மிக மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. குளிர்பானத்தை அதிகமாக குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் அவை சில நேரங்களில் உயிருக்கே கூட ஆபத்தாக முடிந்து விடலாம் என எச்சரிக்கின்றனர்  மருத்துவர்கள்.

குளிர்பானங்கள்
 இது குறித்து ஹெல்த்லைன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . அதில்  குளிர்பானங்களில் சர்க்கரை மற்றும் கலோரிகளைத் தவிர வேறு எந்த சத்துக்களும் இல்லை. செயற்கை சர்க்கரையை அதிக அளவில் உட்கொள்வதால்  உடல் நலத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாம்.  சர்க்கரை பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட ஜூஸ்கள் மற்றும் எனர்ஜி பானங்கள் உடலில் கலோரிகளை அதிகரிக்க செய்து விடுகின்றன. இது விரைவான உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.  
குளிர்பானம் அதிகமாக குடிப்பதால்  கல்லீரலும் பாதிப்படைகிறது.  இதன் காரணமாக, மது அல்லாத கொழுப்பு கல்லீரல் உருவாகலாம். கல்லீரலில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது. 

குளிர்பானங்கள்
அதிகப்படியான குளிர்பானத்தை குடிப்பதால் உடலில் அதிகப்படியான சர்க்கரை சேர்ந்து விடுகிறது. இதனால் உடல் பருமன் அதிகரிப்பதுடன் அல்லாமல்  உடலின்  அனைத்து பாகங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் இரத்த சர்க்கரை அதிகமாகிறது.  
குளிர் பானங்களை அதிக அளவில் குடிப்பதால் வயிற்றில் கொழுப்பு சேரும். அதில் காணப்படும் ஃப்ரக்டோஸ்  வயிற்றைச் சுற்றி கொழுப்பு வடிவில் குவியத் தொடங்கி விடுகின்றன.இதனால்  உள்ளுறுப்பு கொழுப்பு அதிகரித்து  இதயம் மற்றும் சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கச் செய்கிறது.
அதிகப்படியான சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள்  மூளைக்கு தீங்கு விளைவிப்பதாக பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!