“யாரும் சாப்பிடாதீங்க... பிரியாணியில் ‘பீடி’ இலை... போதையில் ரகளை செய்த இளைஞர்!

 
“யாரும் சாப்பிடாதீங்க... பிரியாணியில் ‘பீடி’ இலை... போதையில் ரகளை செய்த இளைஞர்!

யாரும் சாப்பிடாதீங்க... பிரியாணியில் பீடி இலை போட்டு சமைச்சிருக்காங்க என்று கோவையில் பிரபல பிரியாணி கடையில் இளைஞர் ஒருவர் ரகளைச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உணவகத்தின் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் இளைஞரை போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் தான் போதையில் ரகளை செய்ததாக அவர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த நிலையில், விடுவித்துள்ளனர். 

கோவை காந்திபுரத்தை சேர்ந்த சத்திய நாராயணா எனும் இளைஞர் அலுவலகம் விடுமுறை தினம் என்பதால் மது அருந்தியுள்ளார். பின்னர் மதிய உணவுக்காக காந்திபுரம் பகுதியில் இயங்கி வரும் பிரபல எஸ். எஸ். ஹைதராபாத் பிரியாணி அசைவ உணவகத்தில், ஆன்லைன் மூலமாக பிரியாணியை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது பிரியாணியில் இருந்த இலை ஒன்று வாயில் தென்பட்டதும், அதனை பீடி துண்டு என நினைத்து ஆவேசமாக பிரியாணியையும் எடுத்துக் கொண்டு எஸ். எஸ் பிரியாணி கடைக்கு நேரில் சென்று, தலைக்கேறிய போதையில், ‘பிரியாணியில் எதற்காக பீடி இலைகளைப் போட்டு சமைக்கறீங்க? என்று கேட்டு ரகலையில் ஈடுபட்டுள்ளார். 

அவர் போதையில் இருந்ததைக் கண்டு ஊழியர்கள் சமாதானம் பேச முயற்சிக்கையில் ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் இது குறித்து காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சத்யநாராயணனை விசாரிக்க வந்த போலீசாரையும் போதையில் திட்டத் தொடங்கினார் சத்ய நாராயணா. 

“யாரும் சாப்பிடாதீங்க... பிரியாணியில் ‘பீடி’ இலை... போதையில் ரகளை செய்த இளைஞர்!

சாலையில் நின்றபடியே தொடர்ந்து கூச்சலிட்டு பிரச்சனை செய்ததால் போக்குவரத்துக்கும் இடையூறாகவும் இருந்த நிலையில், எஸ். எஸ். பிரியாணி கடை ஊழியர்கள் எழுத்து மூலமாக புகார் தெரிவித்ததையடுத்து, காட்டூர் காவல் நிலைய போலீசார், சத்திய நாராயணனை அழைத்துச் சென்று விசாரித்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் சத்திய நாராயணன் பிரியாணி இலையை சாப்பிட்டு விட்டு, பீடி இலை என்று போதையில் உளறியது தெரிய வந்தன. பிறகு காவல் நிலையத்தில், தான் தவறு செய்து விட்டதாகவும், இனி இதுபோன்று நடந்து கொள்ள மாட்டேன் என்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததையடுத்து இளைஞர் சத்யநாராயணனை ஜாமினில் விடுவித்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!