மறக்காம கலந்துக்கோங்க... இன்று தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம் | உங்க உரிமையை விட்டுக்கொடுக்காதீங்க!
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ 2022ல் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2027ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் எழுதப் படிக்க தெரியாத 5 லட்சத்து 33,100 பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 15 வயதுக்கும் மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிட வேண்டும். இதற்கான செயல்பாடுகள் மாநிலம் முழுவதும் ஜூலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அனைத்து நகர, கிராம பஞ்சாயத்துகளிலும் அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் முழு எழுத்தறிவு பெற்ற பஞ்சாயத்து எனும் இலக்கை விரைவில் அடைவோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இதற்கு தேவையான முயற்சிகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் இதுசார்ந்த தொகுப்பு அறிக்கைகள் அக்டோபர் 30ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் ” என பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். பொதுமக்களும் சமூக சேவை செய்பவர்களும் உங்க ஊருக்கு நல்லது நடக்க வேண்டும், ஊர் பிரச்சனைகளை களைய வேண்டும் என்கிற எண்ணத்துடன் இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு மறக்காமல் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துக்கோங்க. உங்க உரிமையை விட்டுக் கொடுக்காதீங்க.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!