வெயில் காலத்துல இதை மறக்காம செய்துடுங்க...

 
வெயில்

வெயிலை விட கொடுமையா இருக்கும் நீர்கடுப்பு வெயில் காலத்துல இதையெல்லாம் மறக்காம செய்துடுங்க. கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சாலையோரங்களில் இளநீர், பதநீர், நுங்கு, வெள்ளரி, தர்ப்பூசணி கடைகள் வரிசைகட்டி நிற்கின்றன. இருந்தாலும் வீட்டில் உள்ள குழந்தைகள், பெரியவர்களை  பழச்சாறு மட்டுமல்ல தண்ணீர் குடிக்க வைப்பதே பெரும்பாடு. வயதானவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நீரின் அளவை குறைத்து குடிப்பாங்க.

குழந்தைகள் குளிர்பானங்களை வேண்டுமானால் குடிப்பார்களே தவிர நீரை குடிக்க வைப்பது பெரும் சவால் தான். குடிச்சிட்டேனே என்று சொல்லி தண்ணீரை ஜன்னல் வழியாக வெளியே ஊற்றி விடுவதுண்டு. ஏற்கனவே வெயில் கொளுத்தி வருவதால் குடிக்கும் நீரின் அளவு குறைந்தால் உடனே நீர்க்கடுப்பு பிடித்து விடும்.  இதனால்  சிறுநீர் வெளியேறும் அளவு குறைந்து கடும்வலி ஏற்படும்.நீர்க்கடுப்பு

சிறுநீர் அடர்த்தி அதிகமாகி, அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறத் தொடங்கும். சிறுகுழந்தைகள் எனில் சொல்லவும் தெரியாமல் கத்தி கூப்பாடு போடும்.  பெரியவர்களுக்கு, உப்புக் கலந்த கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் கிட்னியில் படிந்து கற்களாக உருவெடுக்கும்.
இதனை வீட்டிலேயே சில நடைமுறைகளை கடைப்பிடிப்பதால் சரி செய்து விட முடியும் என்கின்றனர் வீட்டு பெரியவர்கள். 
3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர்  குடிக்க வேண்டும்.
தினசரி உணவில் கீரைகள், காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள்  சேர்த்துகொள்ளவேண்டும். 
பாஸ்ட்புட், வெளி உணவுவகைகள், குளிர்பானங்கள், வறுத்த, காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். 

மண்பானை
காலை வெயில் ஏறத் தொடங்கியதும் 10 மணிக்கு வெந்தயத்தை லேசாக வறுத்து, மிக்ஸியில் பொடித்து மோரில் கலந்து குடிக்கலாம். ஒரு டம்ளர் தண்ணீரில், எலுமிச்சைச்சாறு பத்து சொட்டுப்பிழிந்து, சிறிது கல் உப்பு, ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் நீர்க்கடுப்பு போயே போச்.  தனியாவை வாசம் வரும் வரை சிவக்க வறுத்துப் பொடித்து, ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் தனியாப் பொடி நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.

சீரகம் அரை தேக்கரண்டி, சோம்பு கால் தேக்கரண்டி, பத்து சின்ன வெங்காயம், ஒரு ஸ்பூன் தனியா, இவற்றை மிக்ஸியில் அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து சாப்பிட்டால் நீர்க்கடுப்பிலிருந்து உடனடி குணம் காணலாம். மண்பானையில் தண்ணீர் ஊற்றி, வெட்டிவேரைப் போட்டு ஊற வைத்து, அதை குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.
நல்லெண்ணெய் குளியல் வாரம் இருமுறை அவசியம்.  நீர்க்காய்கறிகளான புடலங்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய், பீர்க்கங்காய், வாழைத்தண்டு இவைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

ஒரு புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web