வெள்ளிக்கிழமைகளில் இதை செய்ய மறக்காதீங்க... அதிர்ஷ்டம் எப்போதும் கூடவே குடியிருக்கும்!

 
இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்!!

வெள்ளிக்கிழமைகள் ரொம்பவே விசேஷமானவை. அதிலும் ஆடி மாதத்தில் வருகிற வெள்ளிக்கிழமையில் இதைச் செய்ய துவங்குவது கூடுதல் சிறப்பு வெள்ளிக்கிழமைகளில் இந்த விஷயங்களை மறந்துடாம செய்து வாருங்க… அப்புறம் பாருங்க நீங்க கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் எப்படி பத்திரமா உங்ககிட்ட தங்குதுன்னு லட்சுமிக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. நம்மிடம் செல்வம் வருவதற்கும், நிரந்தரமாக தங்குவதற்கும் வெள்ளிக்கிழமைகளில் சில அடிப்படையான விஷயங்களைக் கடைப்பிடித்து வர வேண்டும்.

நாம் வசிக்கும் வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் நமது இல்லத்தில் நிறைந்திருக்கும். அதனால், தேவையற்ற வீண் விவாதங்களை வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள். மாலை விளக்கு வைத்ததும், வீட்டில் அழுகை சத்தம் கேட்க கூடாது.

வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செஞ்சா செல்வம் நிலையா வீட்டில் தங்கும்!!

வெள்ளிக்கிழமைகளில் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்று நமது சாஸ்திரம் சில அடிப்படையான விஷயங்களை வகுத்து வைத்திருக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் மறக்காமல் கடைப்பிடித்து வாங்க. அப்புறம் எப்பவுமே செல்வம் நிலையாக நிரந்தரமாக நம்முடனே தங்க துவங்கும். கண்களுக்கு புலப்படாத ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷம் நம்மைச் சுற்றி பரவ துவங்கும்.

வெள்ளிக்கிழமைகளில் இந்த கீழ்காணும் விஷயங்களைத் தவறாமல் கடைப்பிடித்து வாங்க. அதன் பிறகு உங்கள் வாழ்வில் ஏற்றம் ஏற்படுவதை நீங்கள் கண்கூடாக உணரலாம். உங்கள் வாழ்வில் வசந்தம் வீச துவங்கியதும், மறக்காமல் எங்களுக்கு dinamaalai@gmail.com என்கிற ஈ-மெயில் முகவரிக்கு எழுதுங்கள். உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செஞ்சா செல்வம் நிலையா வீட்டில் தங்கும்!!

பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படும் அதிகாலை 4 மணியில் இருந்து 5 மணிக்குள்ளாக படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். தூங்கி எழுந்ததும் நிச்சயமாக சோம்பல் முறிக்க கூடாது. உங்கள் உள்ளங்கைகளை கண் விழித்ததும் தினந்தோறும் பார்த்து வாருங்கள். அன்றைய நாளின் பலன் உங்களுக்கு தெரிய துவங்கும்.

பெண்கள், தூங்கி எழுந்து வீட்டின் வாசல் கதவை திறக்கும் போது, அஷ்டலட்சுமிகளின் திருநாமத்தை உச்சரித்தபடியே திறக்க வேண்டும். அவ்வாறு செய்வதால், அஷ்டலட்சுமிகளும் வீட்டிற்குள் சந்தோஷமாக நுழைவார்கள்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.

காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றியவுடன் வெளியே செல்லக் கூடாது.

வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செஞ்சா செல்வம் நிலையா வீட்டில் தங்கும்!!

பூஜையறையில் சாமி படங்களுக்கு தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் பூக்களை படைக்க வேண்டும்.

வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால், தீய சக்திகள் வீட்டிற்குள் வராது என்பது ஐதீகம். நமது குல தெய்வம் எப்போதும் நமக்கு துணையிருக்கும்.

பூஜை முடிந்ததும் பெண்கள் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் கட்டாயம் குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தங்கத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கும் முன் குடும்பத் தலைவி தான் முதலில் குங்குமம் இட்டுக் கொண்டு பின்னர் தான் வந்திருக்கும் விருந்தினர்களுக்கோ, உறவினர்களுக்கோ கொடுக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செஞ்சா செல்வம் நிலையா வீட்டில் தங்கும்!!

சாமிக்கு இலையில் வைத்து தான் உணவு மற்றும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது நமக்கு எல்லா விதமான செல்வங்களையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. நீங்கள் வாங்குவது கல் உப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுப்பது நமக்கு சுபிட்சத்தைக் கொடுக்கும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web