மிஸ் பண்ணாதீங்க... தீபாவளி சிறப்பு ரயில்கள்... இன்று முன்பதிவு துவக்கம்!

 
ரயில்

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு விடுமுறை நாட்களில் சென்று திரும்புவது பெரும் சவால் தான். அது தீபாவளி, பொங்கல் என்றில்லாமல் வார இறுதி நாட்களாக இருந்தாலும், சேர்ந்தாற் போன்று இரண்டு நாட்கள் விடுமுறையாக இருந்தாலே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் துவங்கி, ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் வரையில் கொண்டாட்டம் தான். எப்போதும் பொங்கல், தீபாவளிக்கான ரயில் டிக்கெட்டுகள் துவங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடுகிறது.

இந்த முறை ஆயுதபூஜை, தசரா விடுமுறை நாட்களில், ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை, ரூ.4000, ரூ.6000 வரை விற்பனை செய்யப்பட்டது. இனி, டிக்கெட் விலையை ஆம்னி பேருந்துகளில் குறைக்க மாட்டார்கள். பாதுகாப்பான பயணமும் ரயில் பயணம் தான். அதனால் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. தீபாவளிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று நவம்பர் 2ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த வாய்ப்பை  மிஸ் பண்ணாதீங்க. 

ரயில்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாகர்கோவில் தாம்பரம் இடையேயும், தாம்பரம் நாகர்கோவில் இடையேயும் தலா நான்கு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் நவம்பர் 5, 12, 19, 26 தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இதே போல் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் நவ 6,13, 20, 27 தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து ஞாயிறு அன்று மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பாட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு தாம்பரம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இறுதியாக தாம்பரத்திற்கு அதிகாலை 4.10 மணிக்கு வந்து சேரும்.

இதேபோல் திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இறுதியாக நாகர்கோவிலுக்கு இரவு 8.45 மணிக்கு சென்றடையும். நாகர்கோவில்- தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று நவம்பர் 2ம் தேதி காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web