மிஸ் பண்ணாதீங்க... நவ.27 கடைசி தேதி... +2 தேர்ச்சியடைந்தவர்களுக்கு ரயில்வேயில் 3,058 காலி பணியிடங்கள்!
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. நவம்பர் 27ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடைசி தேதி வரையில் காத்திருக்காதீங்க. இந்திய ரயில்வேயில் பணிபுரிய விரும்புவோருக்கு மிகப் பெரிய வேலை வாய்ப்பாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
ரெயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்டு (RRB) சார்பில் நாடு முழுவதும் மொத்தம் 3,058 கமர்ஷியல்–டிக்கெட் கிளார்க் மற்றும் கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் தகவலின்படி, கமர்ஷியல்–டிக்கெட் கிளார்க் 2,424, அக்கவுண்ட்ஸ் கிளார்க்–டைப்பிஸ்ட் 394, ஜூனியர் கிளார்க்–டைப்பிஸ்ட் 163 மற்றும் டிரெயின்ஸ் கிளார்க் 77 உள்ளிட்ட பதவிகள் உள்ளன. சம்பள வரம்பு ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டைப்பிஸ்ட் பணிகளுக்கு ஆங்கிலம் / ஹிந்தி கணினி தட்டச்சுத் திறன் அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் 18 வயது நிறைவடைந்தவராகவும் 30 வயதுக்குள் இருப்பவராகவும் இருக்க வேண்டும். அரசாணையின்படி நிர்ணயிக்கப்பட்ட வயது தளர்வுகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். இதில் கணினித் தேர்வு எழுதுபவர்களுக்கு ரூ.400 திருப்பிச் செலுத்தப்படும். பிற பிரிவினருக்கு ரூ.250 வசூலிக்கப்படுவதுடன் தேர்வு முடிந்த பின்னர் முழுத் தொகையும் திருப்பி வழங்கப்படும்.
மூலத் தேர்வாக First Stage, Second Stage கம்ப்யூட்டர் பேஸ்டு டெஸ்ட், டைப்பிங் ஸ்கில் டெஸ்ட் அல்லது CBAT (தகுந்தபடி), ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறும்.

விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே ஏற்கப்படுகின்றன. 28 அக்டோபர் 2025 முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ள நிலையில், விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 27, 2025 ஆகும். ஆர்வமுள்ளவர்கள் http://www.rrbapply.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் பணியாற்ற விரும்புவோர் காலக்கெடு தவறாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
