மிஸ் பண்ணாதீங்க... இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்... 15,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்!

 
வேலை வாய்ப்பு

இன்று மிஸ் பண்ணாதீங்க... சென்னையில் அக்டோபர் 28ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. சுமார் 15,000க்கும் அதிகமான காலி பணியிடங்கள் உள்ளன.  இந்த வேலை வாய்ப்புகளை மிஸ் பண்ணாதீங்க. 

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், சைதாப்பேட்டை, மேற்கு ஜோன்ஸ் சாலையிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று அக்டோபர் 28ம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் சிறை தண்டனை'' - சென்னை மாவட்ட ஆட்சியர்  எச்சரிக்கை | "Imprisonment if women's hostels are not registered" - Chennai  District Collector warns ...

இவ்வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துக் கொண்டு 15,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, தொழிற்கல்வி, பொறியியல் பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் உள்ளிட்ட தகுதியுள்ள நபர்கள்அனைவரும் கலந்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in  எனும் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது ல்த்ல்ள்ஹய்ற்ட்சர்ம்ங்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் எனும் மின்னஞ்சல் மூலமோ அல்லது 044-24615160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஐப்பசி மாதத்தில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web