மிஸ் பண்ணாதீங்க... நாளை கடைசி தேதி... தமிழகத்தில் மொத்தம் 2250 காலிப்பணியிடங்கள்!

 
வேலைவாய்ப்பு பதிவு

தமிழகத்தில் மொத்தம் காலியாக இருக்கும் 2,250 துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாளை அக்டோபர் 31ம் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக தகுதியானவர்கள் உஙக்ள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யுங்க. 

தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கான நியமனங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் மேற்கொண்டு வருகிறது.

வேலைவாய்ப்பு முகாம்

இந்நிலையில், தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 2,250 துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) வெளியிட்டுள்ளது.

துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அக்.31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300 ஆகவும், மற்ற பிரிவினருக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

செவிலியர் விடுதி

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரால் வழங்கப்பட்ட 18 மாத கால பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டாண்டுகளுக்கான துணை செவிலியர் (auxiliary nurse midwife) அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு செவிலியர்மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web