இந்தியா கேட் அருகே இரட்டை போராட்டம்... பரபரப்பு !
தலைநகர் டெல்லியில் நேற்றிரவு ஒரே நேரத்தில் இரண்டு வேறு போராட்டங்கள் நடைபெற்றது. ஒன்று டெல்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தவறிய பாஜக ஆளும் அரசைக் கண்டித்து, மற்றொன்று தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பைக் எதிர்த்து நடைபெற்றது. இந்தியா கேட் அருகே நடந்த இந்த அபூர்வ நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
முதல் போராட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு, “டெல்லி காற்று உலகிலேயே மோசமான நிலையில் உள்ளது, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோஷமிட்டனர். முகக்கவசம் அணிந்தும் பதாகைகள் ஏந்தியும் போராட்டம் நடைபெற்றது. அதேசமயம், விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரு நாய்கள் விவகாரத்தில் அமைதியான போராட்டம் நடத்தினர். “காப்பகங்களில் அடைப்பது கொடுமை; கருத்தடை செய்து விடுவிப்பதே தீர்வு” என்று அவர்கள் வாதிட்டனர்.

இரு போராட்டங்களும் அமைதியாக நடைபெற்றதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. போலீஸார் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு மனுவாக அளித்தனர். டெல்லியின் காற்று மாசு மற்றும் தெரு நாய்கள் பிரச்சினையை ஒரே நேரத்தில் வெளிப்படுத்திய இந்த இரட்டை போராட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
