வரதட்சிணை வழக்கு.. குற்றவாளியை கைது செய்ய முயன்ற போது மூண்ட கலவரம்.. காவலர்களை தாக்கிய கிராமவாசிகள்!

 
 ஜிதேந்திர யாதவ்

பீகாரில் வரதட்சிணை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய சென்ற போலீசாரை அப்பகுதி மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள லஹேரியசராய் பகுதியில் உள்ள அபண்டா கிராமத்தில் வசிக்கும் ஜிதேந்திர யாதவை நீதிமன்ற வாரண்டின் அடிப்படையில் கைது செய்ய போலீஸ் குழு நேற்று சென்றது. அப்போது, ​​ஜிதேந்திர யாதவ் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் போலீசாரை தடுக்க முயன்றதால் கலவரம் மூண்டது.


சம்பவம் தொடர்பான காணொளியில், பெரும் கும்பல் ஒன்று கற்களை வீசியும், காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க முயல்வதும் காணப்படுகின்றது. குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர யாதவ் வீட்டிற்கு போலீசார் வருவதை தடுக்க, அவர்கள் பிரதான சாலையில் டயர்களை எரித்து மறியலில் ஈடுபட்டனர். இதில், 3 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு கான்ஸ்டபிள் உட்பட 3 அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, தாக்குதலைத் தடுக்கவும் கூட்டத்தைக் கலைக்கவும் பாதுகாப்புப் படையினரின் கூடுதல் குழு அனுப்பப்பட்டது.

இது குறித்து பேசிய தர்பங்கா சப்-டிவிசனல் போலீஸ் அதிகாரி (எஸ்டிபிஓ) அமித் குமார், உள்ளூர் மக்கள் கூட்டத்தில் குழந்தைகள் இருந்ததாக கூறினார். அதனால் அவர்கள் மீது அதிகம் சுடவில்லை. பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசினர். எனினும் லேசான பலத்தை பயன்படுத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றார். இதற்கிடையில் ஜிதேந்திர யாதவ் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர், அவர்களுக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web