வரதட்சணை கொடுமை.. 28 நாள் திருமண வாழ்க்கைக்கு ரூ.1,500 கொடுத்து முத்தலாக் நோட்டீஸ் அனுப்பிய கணவன்!

 
நஸ்ரின் பாத்திமா

திண்டுக்கல் மாவட்டம் பழனி லட்சுமிபுரத்தில் வசித்து வருபவர் நஸ்ரின் பாத்திமா (31). இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த காதர் ரியாஸ் என்ற இளைஞருக்கும் கடந்த 2022ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, கணவர் காதர் ரியாஸ், நஸ்ரின் பாத்திமாவை அவரது தாய் மற்றும் மூத்த சகோதரியுடன் பழனியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

சில நாட்கள் கழித்து நஸ்ரின் ம்ற்றும் பாத்திமாவின் பெற்றோர் கணவர் வீட்டிற்கு சென்றபோது மேலும் 20 பவுன் நகை கொண்டு வந்தால் தான் உங்கள் மகளுடன் வாழ முடியும் என கூறி திருப்பி அனுப்பினர். ஏற்கனவே கடன் வாங்கி 32 சவரன் நகைகளை திருமணம் செய்து கொடுத்த நிலையில் மேலும் 20 பணம் கேட்ட நஸ்ரின் பாத்திமாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மணமகன் வீட்டுக்குச் சென்று பலமுறை பேசியும் பலனில்லை. பின்னர் வரதட்சணை கொடுப்பது தொடர்பாக பழனி மகளிர் காவல் நிலையத்தில் நஸ்ரீன் பாத்திமா புகார் அளித்தார்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், 15 நாட்களுக்கு முன்பு நஸ்ரின் பாத்திமாவுக்கு அவரது கணவர் முத்தலாக் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், தன்னுடன் 28 நாட்கள் வாழ்ந்ததற்கு 1500 ரூபாய் கொடுக்கின்றேன் என கடிதம் அனுப்பியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நஸ்ரின் பாத்திமா மற்றும் அவரது குடும்பத்தினர் பழனி நகர காவல் நிலையம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்க போலீசார் மறுத்துவிட்டனர்.

தமிழகத்தில் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது ஆனால் எந்த ஒரு காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று கூறி வேதனை தெரிவித்தார். மேலும், முத்தலாக் தடை சட்டம் கொண்டு வரப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார். பெற்றோர் கொடுத்த நகைகளை பறித்து ஏமாற்றி  தன்னுடன் வாழ்ந்ததற்காக 1500 ரூபாய் கொடுத்து அவமானப்படுத்திய நபர் மீது மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web