குட் நியூஸ்... பத்திர நடைமுறையில் அதிரடி மாற்றம்... பொதுமக்கள் வரவேற்பு!

 
சொத்து பத்திரம் ரிஜிஸ்ட்ரேஷன் ஆவணங்கள் பதிவுத்துறை

 சொத்து விற்பதற்கும் வாங்குவதற்கும் கிரையப் பத்திரம் என்பது ஒரு சட்டப்பூர்வ ஆவணமாகும். ஒரு சொத்தை  வாங்கும்போது அதை வாங்குபவரும், விற்பவரும் இணைந்து கையெழுத்திட்டு பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த ஆவணம் தான் கிரையப் பத்திரம் எனப்படுகிறது. ஒரு சொத்தை கிரைய பத்திரமாக பதிவு செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.  

பத்திரபதிவு பட்டா பத்திரம் ஸ்டாம்பேப்பர்


அப்படி கிரையப்பத்திரம் பதிவு செய்யும் போது, முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதமும், பதிவு கட்டணம் 2 சதவீதமும் என மொத்தம் 9 சதவீதம் அளவிற்கு தமிழக அரசு கட்டணம் வசூலித்து விடுகிறது.  கிரையப் பத்திரத்தை ரத்தும் செய்ய  ரூ.50 கட்டணமாக செலுத்தி இருதரப்பும் சேர்ந்து ரத்து ஆவணம் பதிவு செய்ய வேண்டும் கிரையப் பத்திரத்தை ரத்து செய்வதால் வாங்கியவரின் பெயரிலேயேதான் அந்த சொத்து இருக்கும். மீண்டும் பழைய உரிமையாளரின் பெயருக்கு மாறாது.
இதனால், பழைய உரிமையாளரின் பெயருக்கு சொத்தை மாற்றுவதற்கு மீண்டும் புதிதாக ஒரு கிரையப்பத்திரம் பதிவு செய்ய வேண்டியிருந்தது.

பத்திரம்

இதனை செய்ய  மீண்டும்   9 சதவீதம் பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் பணவிரயம் ஏற்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசு  கிரையப் பத்திர ரத்து நடைமுறையில் அதிரடி மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.அதன்படி  தற்போது தமிழக பத்திரப்பதிவு துறை கிரையப் பத்திரத்தை ரத்து செய்யும் போது,  'இந்த ரத்து ஆவணத்தின் மூலம் உரிமை மாற்றம் ஏற்படாது' என்ற முத்திரை இனி குத்தப்படாது என அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையின் மூலம் ஏற்கனவே சொத்து விற்பனை செய்தவர் பெயருக்கே  அந்த சொத்து சென்று விடும். இந்த ரத்து ஆவணத்துக்கு ரூ.1,000 கட்டணம் மட்டும் செலுத்தினால் போது என அறிவித்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web