சென்னையில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

 
குடிநீர்
 

 நாளை முதல் ஏப்ரல் 27ம் தேதி வரை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அம்பத்தூர், அண்ணா நகர் உட்பட 7 மண்டலங்களில்  குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து  சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  பூந்தமல்லி நெடுஞ்சாலையில் முக்கிய குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணிகள் நாளை வியாழக்கிழமை  இரவு 9 முதல் ஏப். 27 ம் தேதி இரவு 9 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.  இதன் காரணமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் நேரங்களில் சென்னை அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படும் பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குடிநீர்


குடிநீர் நிறுத்தப்படும் பகுதிகள் அம்பத்தூர், அத்திப்பட்டு, பாடி, பார்க் சாலை, டி.எஸ்.கிருஷ்ணா நகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு. அண்ணா நகர், அரும்பாக்கம், அமைந்தகரை, சூளைமேடு. தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மயிலாப்பூர், கோடம்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி, வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, ஆர்.ஏ.புரம்,  வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி  பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். 

சென்னை மக்களே உஷார்!.. நாளை இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் இல்லை


பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்கு https://cmwssb.tn.gov.in/ எனும் இணையதள முகவரியில்  லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளளாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு  044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத  மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெருகுழாய்களுக்கு  லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்படாது. இவை  எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web