அமெரிக்க வெள்ளை மாளிகை மீது கார் மோதி விபத்து... ஓட்டுனர் உயிரிழப்பு!

 
வெள்ளை மாளிகை

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் வெளிப்புற வாயில் மீது இந்திய நேரப்படி நேற்று இரவு 10.30 மணியளவில் கார் ஒன்று அதிவேகத்தில் சென்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுனர் உயிரிழந்தார். வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. விபத்து நேரிட்டதும், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஓட்டுனரை மீட்க முயன்றனர். 

இது தொடர்பாக வெள்ளை மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "நேற்று இரவு 10:30 மணியளவில் அதிவேகமாக வந்த கார் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற சுவற்றில் மோதியது. இதனால், வெள்ளை மாளிகைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெள்ளை மாளிகை

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஓட்டுனரை மீட்க முயன்ற போதும், காரின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையின் ரகசிய சேவையும், கொலம்பியா மாவட்டத்தின் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து, இந்த விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக ரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லீல்மி தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகை வளாகத்தின் வெளிப்புற வாயிலில் வாகனம் மோதிய சம்பவம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தில், வெள்ளை மாளிகையின் வெளிப்புறத்தில் வாகனம் மோதி விபத்திற்குள்ளானது இது இரண்டாவது முறை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web