தமிழகத்தில் அதிர்ச்சி... டோல்கேட் கட்டணம் கேட்ட ஊழியர் மீது காரை ஏற்றிய ஓட்டுநர்!

 
டோல்கேட்

தமிழகத்தில் பல காலங்களாகவே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறை பெரும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. விடுமுறை நாட்களில் நீண்ட வரிசையில் மணிகணக்கில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் எரிச்சலடைவதில் துவங்கி, திடீர் திடீரென உயர்த்தப்படுகிற கட்டணங்கள், மொழி தெரியாத ஊழியர்கள் என்று சுங்கசாவடிகளில் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


இந்நிலையில், மதுரை மாவட்டம்  திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் நீண்ட நேரமாக செல்ல அனுமதிக்கப்படாமல், வரிசையில் காத்திருந்த வாகனங்களிடமும் கட்டணத்தை வசூலிக்காமல் இருந்து வந்த நிலையில், வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்ததால் எரிச்சலடைந்த வாகன ஓட்டி ஒருவர், வரிசையில் இருந்து காரைக் கிளப்பி, கட்டணம் செலுத்தாமல் செல்ல முடிவெடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் தடுப்பைத் தள்ளிக் கொண்டு அவர் காரைக் கிளப்பிச் செல்ல முயன்ற நிலையில், சுங்கச்சாவடி ஊழியர் அவரது காரை வழிமறித்து மீண்டும் பிளாஸ்டிக் தடுப்பானை குறுக்கே வைக்கிறார். ஆத்திரத்தில் மேலும் முன்னேறிச் செல்ல காரைக் கிளப்பிய போது, சுங்கச்சாவடி ஊழியர் கார் மோதி கீழே விழுகிறார்.

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் சென்றவரை தடுத்த ஊழியரை காரல் மோதி தள்ளிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு #tollgate #Tolgate #CCTV #viralvideo #Kamadenutamil pic.twitter.com/z8ya0CKu6M

இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. 
திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை அங்கிருந்து அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாகவே பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி செல்லும் பதிவு எண் இல்லாத வாகனங்களும், வேறு மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்களும், திருமங்கலம் நகர் பகுதி வாகனங்கள் என்று பொய் சொல்லி கப்பலூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்வது வாடிக்கை. இது போன்ற வாகனங்களை சுங்கச்சாவடி ஊழியர்கள், கட்டணம் செலுத்தும்படி கூறும்போது, இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் மற்றும் கைகலப்பும் ஏற்படுகிறது.

டோல்கேட்
இந்நிலையில், இன்று கப்பலூர் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்ததால் கடுப்பான வாகன உரிமையாளர் ஒருவர், கட்டணம் செலுத்தாமல் காரை எடுத்துச் செல்ல முயன்றார். இதைப் பார்த்த சுங்கச்சாவடி ஊழியர், கார் முன்பாக நின்று கட்டணத்தை செலுத்தி விட்டுச் செல்லும்படி தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த கார் உரிமையாளர், அந்த ஊழியர் மீது காரை விட்டு மோதினார். இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த ஊழியரை, சக ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் எதிரொலியாக, தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, காவல்துறையிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமல் இருக்க கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றிலுமாக அகற்றுவது அல்லது இடமாற்றம் செய்வது தான் ஒரே வழி என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web