டிரைவர் இல்லாத பஸ்.. பெட்ரோல் நிலைய ஊழியர் மீது திடீரென மோதியதால் அதிர்ச்சி!

 
தேஜ்பால்

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கில் டிரைவர் இல்லாத பேருந்து ஒன்று திடீரென நகர்ந்து  ஊழியர் தேஜ்பால் மீது மோதிய சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை பெட்ரோல் பங்கிற்கு பஸ் ஒன்று வந்தது. அப்போது பெட்ரோல் நிலைய ஊழியர் ஒருவர் பைக்கில் காற்று வீசிக் கொண்டிருந்தார்.


அப்போது, ​​திடீரென நின்று கொண்டிருந்த பஸ், டிரைவர் இல்லாமல் மெதுவாக நகர்ந்து, அருகில் அமர்ந்து, பைக்கிற்கு  காற்று அடித்துக்கொண்டிருந்த ஊழியரின்  மீது மோதியது. அப்போது சாலையோரம் நின்றிருந்த மற்றொரு பேருந்து மீது மோதியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் அந்த ஓடினர். பின்னர், பலத்த காயமடைந்த தேஜ்பாலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர் இல்லாத பேருந்து ஒருவர் மீது மோதியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சஞ்சய் பாண்டே கூறியதாவது, சக்கரங்களுக்கு முன் வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் அகற்றப்பட்டு, பஸ் நிறுத்தம் அருகே சரிவு இருந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாக கூறினார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web