வாகன ஓட்டிகளே உஷார்!! வார இறுதி நாட்களில் போக்குவரத்து மாற்றம்!!

 
மெரினா

தமிழகத்தின் தலைநகர் சென்னை சாதாரணமாகவே முக்கிய பகுதிகளில் கூட்டநெரிசல், போக்குவரத்து நெரிசல் தான். வார இறுதிகளில் கேட்கவே வேண்டாம்.எல்லா இடங்களிலும் காத்திருத்தல் தான். உணவகம்  தொடங்கி துணிக்கடை, நகைக்கடை, தியேட்டர், மால்கள் என அனைத்து இடங்களிலும் க்யூ தான். இதனாலேயே வெளியில் செல்வதற்கு பயந்தே பலரும் வார இறுதிகளில் அவுட்டிங்கை தவிர்த்து வருகின்றனர். அத்துடன் சென்னையை சிங்காரச் சென்னையாக்க பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. போதாதற்கு மெட்ரோ ரயில் பணிகள் வேறு. எதிரில் உள்ள கடைக்கு செல்வதற்கே 2 லெப்ட், 2 ரைட், ஒரு யூ டர்ன் போட்டு தான் செல்ல வேண்டிய நிலை.

போக்குவரத்து மாற்றம்

இதனால் பொதுமக்கள் படும் அவதி சொல்லி மாளாது. இதன் அடிப்படையில் சென்னை மெரினா கடற்கரையில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி சனி ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாலை நேரத்தில் மெரினாவில் கட்டுக்கடங்காத கூட்டம் குவியும் .  கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் இடையூறு  ஏற்படாத வகையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து துறை காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


காமராஜர் சாலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் நேரம் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்றும் கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் திருப்பப்பட்டு , பாரதி சாலை -பெல்ஸ் ரோடு -வாலாஜா சாலை வழியாக அண்ணா சாலை சென்று தங்களது இலக்கை அடையலாம். 
ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை X பாரதி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு, பெல்ஸ் ரோடு சென்று அண்ணா சாலை அல்லது உழைப்பாளர் சிலை வழியாக சென்று தங்களது இலக்கை அடையலாம். ரத்னா கபேயில் இருந்து வரும் வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்கு செல்ல அனுமதிக்கப்படாது.அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது.

போக்குவரத்து

நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாமல் நேராக கண்ணகி சிலை சென்று வலது புறம் திரும்பி பாரதி சாலை - பெல்ஸ் ரோடு - வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை வழியாக செல்ல வேண்டும். பாரதி சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் செல்லலாம்.  வாலாஜா சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web