பேக்கரி உரிமையாளரை வெட்டி சாய்த்த போதை கும்பல்... மனைவி கண்முன்னே கொடூரம்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசித்து வருபவர் சிவக்குமார். இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே பேக்கரி கடை நடத்தி வருகிறார். தற்போது தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக சிவக்குமார் தனது இரண்டாவது மனைவி காளீஸ்வரி மற்றும் 4வயது மகன் குருசரணுடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
அந்த சமயத்தில் நேற்று முன்தினம் மாலை தெற்குவெங்காநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் உள்ள தனது சொந்த நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றிருந்தார். அப்போது சிவக்குமாரின் இடத்துக்கு அருகே 4 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை சிவக்குமார் உங்களுக்கு தண்ணியடிக்க வேற இடமே கிடைக்கலையா என கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சிவக்குமாரை மனைவி கண்முன்னே அரிவாளால் சரமாரியாக வெட்டினர். சிவக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது அருந்தியதை தட்டி கேட்டதற்காக ஆத்திரமடைந்த கும்பல் குடிபோதையில் வெட்டி கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!