போதைப்பொருள் கும்பல் வெறிச்செயல்... 57 ராணுவ வீரர்களை கடத்தல்!

தென்அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் போதைப்பொருள் கும்பல் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. போதைப்பொருள் விற்பனை, கடத்தல் உட்பட பல்வேறு நடவடிக்கையில் இந்த கும்பல் ஈடுபட்டு வருகின்றன.
இந்த போதைப்பொருள் கும்பலை ஒழிக்க அந்நாட்டு போலீசார், ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்நாட்டின் எல் தம்போ நகரில் உள்ள மலைப்பகுதியில் போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு ராணுவ வீரர்கள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அங்கு இருந்த போதைப்பொருள் கும்பல் ராணுவ வீரர்களை சிறைபிடித்து அவர்களை கடத்திச் சென்றது. மொத்தம் 57 ராணுவ வீரர்கள் கடத்திச் செல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலை குறித்து தெரியாத நிலையில் அந்த மலைப்பகுதியில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!