ஆய்வகம் நடத்தி போதைப்பொருள் தயாரிப்பு.. 17 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்!

 
போதை பொருள் வைத்திருப்பவர்களை சிறையில் அடைக்கக் கூடாது! அதிரடி அறிவிப்பு!

சென்னை மாதவரத்தில் 16 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21ம் தேதி ரோஜா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன், திருவல்லிக்கேணியை சேர்ந்த கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து சுமார் 1.5 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள்

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அருப்புக்கோட்டையில் ஆய்வுக்கூடம் அமைத்து மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஆய்வு கூடத்தில் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் அருப்புக்கோட்டையை சேர்ந்த முருகன், லட்சுமி நரசிம்மன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே டெல்லி, ஹரியானா, மணிப்பூர் ஆகிய இடங்களில் முகாமிட்டிருந்த மாதவரம் சிறப்பு அதிரடிப்படை போலீஸார் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்ட வெங்கடேசனை போலீசார் முதலில் கைது செய்த நிலையில், அவரது மனைவி ஜான்சியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது

இதுவரை சுமார் 17 கோடி மதிப்புள்ள 17.8 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹரியானா, டெல்லி, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சிறப்பு காவல் படையினர் தொடர்ந்து முகாமிட்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web