கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை.. மருந்து நிறுவன உரிமையாளர் புனேவில் கைது.. போலீசார் அதிரடி!

 
 சதானந்த் பாண்டே

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கூரியர் மூலம் போதைப்பொருள் சப்ளை செய்து வந்த மும்பையை சேர்ந்த மருந்து நிறுவன உரிமையாளரை புனேயில்  பெரும்புதூர் போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்படி பெரும்புதூர் பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில், மும்பையைச் சேர்ந்த கூரியர் ஒருவர், பெரும்புதூர் அடுத்த வல்லம் பகுதியில் உள்ள குறிப்பிட்ட முகவரிக்கு அடிக்கடி போதைப் பொருள்களை டெலிவரி செய்து, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அனுப்பியவரின் முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில், மும்பையை சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று கூரியர் மூலம் போதைப்பொருட்களை சப்ளை செய்ததும், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதானந்த் பாண்டே சப்ளை செய்ததும் தெரியவந்தது. அதன்படி மும்பையில் இருந்து தலைமறைவான சதானந்த் பாண்டேவை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சதானந்த் பாண்டே மும்பையை அடுத்த புனேவில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, புனே விரைந்த போலீசார், மருந்து நிறுவன உரிமையாளர் சதானந்த் பாண்டேவை கைது செய்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர், பெரும்புதூர் காவல்நிலையத்தில் போலீஸார் நடத்திய விசாரணையில், பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக பெரும்புதூர் அருகேயுள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

கைது

கைது செய்யப்பட்ட சதானந்த் பாண்டே மீது வழக்கு பதிவு செய்த போலீசார், பெரம்புதூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து, பின்னர் பெரம்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போதை மாத்திரைகள் விற்பனை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web