ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த போதைப்பொருட்கள்.. கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்!

 
விக்னேஷ் - கார்த்தி

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, வேலூர் பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணி தலைமையிலான போலீசார் பள்ளிகொண்டா தோப்பு பகுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது மஞ்சுநாத் திருமண மண்டபம் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதை பார்த்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பள்ளிகொண்டா அடுத்த கேமரன் பேட்டையை சேர்ந்த விக்னேஷ் (25), கீழச்சூரை சேர்ந்த கார்த்தி (25) என்பது தெரியவந்தது.

கைது

மேலும், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ​​ஆந்திர மாநிலம் பலமனேரி பகுதியில் இருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்தது பள்ளிகொண்டா பகுதியில் விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் 4 டேபண்டடோல் அட்டை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இருவரையும் போலீசார் கைது செய்து 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web