அதிர்ச்சி... ரூ.8.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்!

 
போதைப் பொருள்

நாடு முழுவதும் சமீபமாக போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 1.7 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து கச்சார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நுமல் மஹத்தா கூறுகையில், ​​"அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில் தோலைக்கால் காவல் நிலையம் அருகே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த அப்துல் அஹத் லஸ்கர் (33) என்பவரை காவல்துறையினர் விசாரித்தனர். அவரிடம் இருந்து சோப்பு வடிவிலான 1.7 கிலோ எடையுள்ள 139 ஹெராயின் பாக்கெட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ.8.5 கோடி இருக்கும்” என்று தெரிவித்தார். 


போலீசாரின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்த அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, அவரது ட்விட்டர் பதிவில், "போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையில், கச்சார் காவல்துறையினர் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தலை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். சர்வதேச சந்தையில் ரூ.8.5 கோடி மதிப்பிலான சட்டவிரோத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். போதைப் பொருளை கைப்பற்றிய காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதமும் அஸ்ஸாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web