காலிஃபிளவரில் கிடந்த 6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. வடமாநில பெண் அதிரடியாக கைது!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. நேற்று வழக்கம் போல் விமானத்தில் இருந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
வட மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு சுற்றுலா சென்று திரும்பியிருந்தார். அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் அவரை தடுத்து நிறுத்தி தீவிர விசாரணை நடத்தினர்.தன் உடைமைகளில் இருந்த காலிஃபிளவர் மற்றும் காளான்களை முகர்ந்து பார்த்த சுங்க மோப்ப நாய், தரையில் அமர்ந்து தனது நகங்களால் தரையை கீறியது. அப்படி சைகை செய்தால், உடமைகளில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருப்பதாக அதிகாரிகள் புரிந்துக்கொண்டனர்.
அந்த பெண் பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் திறந்து சோதனை செய்தனர். அதில் 14 பார்சல்கள் இருந்தன. அவற்றை ஆய்வு செய்தபோது, காலிஃபிளவர் மற்றும் காளான்களில் அதிக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அந்த பார்சல்களில் சுமார் 6 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 6 கோடி.
கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், வட மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணை அதிரடியாக கைது செய்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பெண் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அப்படியென்றால், சென்னையில் யாருக்கு உயர்ரக கஞ்சா கொடுக்க வந்தார்? என கைது செய்யப்பட்ட இளம் பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!