மெரினா கடற்கரையில் மதுபோதையில் இளம்பெண் அட்டகாசம்.. எச்சரித்து அனுப்பிய போலீசார்!
கோடை விடுமுறையால் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே போலீசார் அங்கு கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மெரினா கடற்கரையில் இளம்பெண் ஒருவர் இளைஞர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். ரோந்து வந்த போலீசார் அருகில் சென்று பார்த்தபோது, போதையில் இருந்தனர்.

அந்த இளம் பெண்ணும் குடிபோதையில் இருந்துள்ளார். அவர்கள் அருகே காலி மதுபாட்டில்கள், பட்டாசுகள் மற்றும் குப்பை உணவுகள் இருந்தன. இவர்களின் செயல்பாடு மெரினா கடற்கரைக்கு சென்ற குடும்பத்தினரை முகம் சுளிக்க வைத்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி வந்து கடற்கரையில் அமர்ந்து மது அருந்தியது தெரியவந்தது. மேலும் அவர்கள் தங்கள் செயலுக்காக வருந்தினர். இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண் மற்றும் இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
