குடிபோதையில் தகராறு.. நண்பனை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த இளைஞருக்கு வலைவீச்சு!

 
சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் விஷால் யாதவ் மற்றும் அபிஷேக் யாதவ். இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூரு அஞ்சனாபூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், விஷால் யாதவ் இன்று காலை கட்டிடத்தின் அடியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

கொலை

இது குறித்து தகவல் அறிந்த தலக்காடு போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விஷால் யாதவ் மாடியில் இருந்து  கீழே விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த இடத்தை சோதனையிட்டபோது மதுபாட்டில்கள் கிடந்தது.  இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். நேற்று இரவு விஷால் யாதவ் மற்றும் அபிஷேக் மது அருந்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீஸ்

தகராறில் விஷால் யாதவை மாடியில் இருந்து கீழே தள்ளி அபிஷேக் கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான அபிஷேக்கை போலீசார் தேடி வருகின்றனர். அபிஷேக் தனது நண்பரை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் குடிபோதையில் ஒரு நபர் தனது நண்பரை மாடியில் இருந்து தள்ளி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web