மதுபோதையில் லாரி ஓட்டுநர்.. கார் மீது மோதி கோர விபத்து... ஒருவர் பலி... சீட் பெல்ட் அணிந்ததால் உயிர் தப்பிய குடும்பத்தினர்!

 
செந்தில் குமார்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரி முன்னே சென்று கொண்டிருந்த டிராக்டர், கார் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.இந்த கண்டெய்னர் லாரியை செந்தில்குமார் என்ற ஓட்டுநர் மது போதையில் இயக்கி சென்றார். பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு வீட்டிற்கு தேவையான உபகரண பொருட்களை ஏற்றி சென்ற போது அதிவேகமாக லாரியை இயக்கியுள்ளார். அப்போது லாரி சேலம் உத்தமசோழபுரம் பகுதிக்கு வந்தபோது,முன்னே சென்ற டிராக்டர் மீது மோதியது.

விபத்து

இதில் டிராக்டர் இயக்கி வந்த ஓட்டுநர் மல்லசமுத்திரம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, கார் மீது மோதியதில் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த காரில் இருந்த ஐந்து பேர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக காரில் சிக்கிக் கொண்டிருந்த நான்கு பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் காரில் வந்த சிறுவனின் கால் பகுதி காருக்குள் மாட்டிய நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி காரில் இருந்த சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆம்புலன்ஸ்
பின்னர் பொக்லைன் வாகனம் மூலமாக காரில் இருந்த சிறுவனை மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதன் காரணமாக சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் பயணித்த அனைவரும் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் உயிரிழப்புகள் ஏற்படாமல் காயத்துடன் மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் லாரி இயக்கி வந்த ஓட்டுநர் செந்தில்குமார் அழைத்து சென்று கொண்டலாம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web