தலைக்கேறிய போதை... பனை மரத்தில் ஏறி தூங்கி வழிந்த ‘குடி’மகன்... போராடிய காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்!

 
லட்சுமணன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள செமனாம்பதி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (45). தொடர்ந்து எந்த வேலைக்கும் செல்லாத இவர், சுற்று வட்டாரப் பகுதிகளில் கிடைக்கும் வேலைகளை செய்து வருமானம் பார்த்துவந்தார். இதில் கிடைக்கும் சொற்ப பணத்தையும் மது அருந்தி விட்டு சாலையோரங்களில் மட்டையாகி விடுவார் என கூறப்படுகிறது.

இந்த சூழலில், நேற்று காலை வேலையை முடித்துவிட்டு, கூலிப் பணத்தை வாங்கிக் கொண்டு வழக்கம்போல் நேராக டாஸ்மாக் சென்று விட்டார். தலைக்கேறிய போதையில் அப்பகுதியில் சுற்றிய லட்சுமணன், சின்னம்பாளையம் ஜமீன் கோட்டாபட்டி பிரிவு அருகே வந்திருக்கிறார். 

லட்சுமணன்

அங்கு சுமார் 100 அடி உயரமுள்ள பனை மரத்தை பார்த்ததும் நமக்கெல்லாம் பயம் வரும். ஆனால் அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மது போதையில் விறுவிறுவென அந்தப் பனை மரத்தில் அங்கிருந்த ஓலை, மட்டையில் அமர்ந்துகொண்டார். பிறகு ஏற்கனவை கைவசம் வைத்திருந்த குவார்ட்டர் பாட்டிலை எடுத்து பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து குடித்திருக்கிறார். இதில் போதை தலைக்கு ஏறிய நிலையில், பனை மரத்தின் உச்சியிலேயே மட்டையாகி விட்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், உச்சியில் இருக்கும் லட்சுமணன் தவறி கீழே விழுந்து விடாமல் இருக்க, மரத்தைச் சுற்றிலும் வலையை விரித்து பிடித்துக் கொண்டனர். பிறகு, தீயணைப்பு வீரர் ஒருவர், பனை மரத்தில் ஏறினார். முதலில், லட்சுணனை கயிறு கட்டி இறக்கலாம் என்று தீயணைப்புத்துறையினர் கருதினர். 

லட்சுமணன்

ஆனால், முழு போதையில் இருக்கும் அவரை, கயிறு கட்டி இறக்குவது இயலாத காரியம் என்கிற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து, மாற்று வழியைத் தேடிக்கொண்டிருந்த நிலையில், அருகில் கிரேன் வைத்து வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டனர். இதைத் தொடர்ந்து, கிரேன் உதவியுடன் போதை ஆசாமி லட்சுமணனை மீட்டனர். இதனிடையே, போதை ஆசாமி ஒருவர் 100 அடி உயரமுள்ள பனை மரத்தின் உச்சியில் தூங்கிய சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இதனால், இதைக் காண ஏராளமான மக்கள் திரண்டனர். இதன் காரணமாக, அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web