குடிபோதையில் விபரீதம்.. வணிக வளாகத்தினுள் அதிவேகமாக நுழைந்த கார்.. 5 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் புகுந்த வாகனம் 5 பேர் காயமடைந்தனர். வாகன ஓட்டியை போலீசார் சுட்டுக் கொன்றனர். நேற்று (டிச. 21) மாலை 5 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் டெக்சாஸ் நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவினர் தப்பிச் செல்லும் வாகனத்தை சுமார் 32 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்றனர். டிரைவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஓட்டுநர், டல்லாஸின் தெற்கே உள்ள கில்லீன் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்குள் தனது வாகனத்தை ஓட்டிச் சென்றார். இதில், மாலின் கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த வாகனம் அங்கிருந்த வாடிக்கையாளர்களை மோதியது. இதில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். எனினும் வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் இருந்ததால் போலீசரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஐந்து பேரும் 6 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என டெக்சாஸ் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட ஓட்டுநர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், தப்பிச் செல்வதற்காக அவர் வாகனத்தை ஷாப்பிங் மாலுக்குள் செலுத்தினாரா அல்லது வேண்டுமென்றே செய்தாரா என போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!