டிடிஎஃப் வாசன் செல்போனை ஒப்படைக்க வேண்டும்... போலீசார் திடீர் உத்தரவு!

 
டிடிஎப் வாசன்
 

செல்போனில் பேசியபடி கார் ஓட்டியதாக கைதான டிடிஎஃப் வாசன், அடுத்த 3 நாட்களுக்குள் தனது செல்போனை ஒப்படைக்க வேண்டும் மதுரை காவல்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மே மாதம் 15ம் தேதி சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு  டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் காரில் பயணித்தார். அப்போது பழகுநர் உரிமத்துடன் அவர் காரை ஓட்டி சென்றதாகவும், செல்போனில் பேசியபடி கார் ஓட்டிக் கொண்டே அதை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களை பதிவிட்டதாகவும் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறியதாக டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 

யூ -ட்யூபர் டிடிஎஃப் வாசன்
இது தொடர்பாக டிடிஎஃப் வாசனை கைது செய்து,  மதுரை மாவட்ட 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கி, 10 நாட்களுக்கு மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு வழக்கறிஞர்களுடன் சென்ற டிடிஎஃப் வாசன் கையெழுத்திட்டார். அப்போது வழக்கு விசாரணைக்காக டிடிஎஃப் வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறையினர் நேரில் நோட்டீஸ் வழங்கினர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!