துபாய் போலீஸ் இந்திய சிறுவனுக்கு கௌரவம்... குவியும் பாராட்டுக்கள்!

 
மனீஸ்

 தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதால் பலரும் சுற்றுலாத் தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு இந்தியக்குடும்பம் துபாய்க்கு சுற்றுலா சென்றது. அங்கு இந்தியர் ஒருவர் தனது  கைக்கடிகாரத்தை  தொலைத்துவிட்டார்.  அந்த கடிகாரத்தை இந்தியச்சிறுவன் யூனிஸ் பார்த்துவிட்டார். உடனடியாக  அதை துபாய்  போலீசிடம் ஒப்படைத்தார்.அந்த பயணி அவரது சொந்த ஊர் திரும்பிவிட்ட  நிலையில், மீண்டும் அவரை தொடர்பு கொண்டு துபாய் போலீசார் கடிகாரத்தைக் கொடுத்தனர்.

துபாய் போலீஸ்

 இதற்கு அந்த பயணி நன்றிகள் பல கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிலையில்,சுற்றுலா காவல்துறை இயக்குநர் பிரிகேடியர் கல்பான் ஒபைத் அல் ஜலாப், துணை லெப்டினன்ட் கர்னல் முகமது அப்துல் ரகுமான், சுற்றுலாத் துறை தலைவர் கேப்டன் ஷஹாப் அல் சாடி அனைவரும் இந்திய சிறுவன் யூனிசுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  வழங்கி கவுரவித்தனர். இது குறித்த  புகைப்படங்களை துபாய் போலீஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.  அதில், சுற்றுலா பயணியின் தொலைந்த கடிகாரத்தை திருப்பி அளித்த சிறுவனின் நேர்மையை துபாய் போலீஸ் கௌரவிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!