வெயிலுக்கு பசுமைப் பந்தல்... மழைக்காலங்களில் பைபர் பந்தலாக மாற்றப்படும். .. ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு!

 
பசுமைப் பந்தல்

 தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகனஓட்டிகளின் சிரமம் தவிர்ப்பதற்காக  போக்குவரத்து சிக்னல்களில்  பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளை மழைக்காலங்களில் பைபர் பந்தல்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல் பணியை, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையிட்டார்.

தண்ணீர் பந்தல்

இது குறித்து அவர்  கோடை வெயிலின் தாக்கத்தை முன்னிட்டு,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் வாகன ஓட்டிகளின் நலனுக்காக நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து சிக்னல் பகுதிகளில் இதுபோன்ற நிழல் பந்தல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அதே நேரத்தில் தாகத்தை தணிக்கவும் சாலையோரங்களில் சென்னை மாநகர் முழுவதும்  199 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தல்களை வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பசுமை பந்தல்

மேலும்  299 இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,44,527 பேருக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தன்னார்வ அமைப்புகளின் ஒத்துழைப்புடனும் இதுபோன்ற நிழல் பந்தல்கள் அமைக்கலாம். இந்த நிழற்பந்தல்கள் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் மேற்கூரைகள் பைபர்களாக மாற்றி அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web