தசரா, நவராத்திரி.. கோவை-ஜெய்ப்பூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு... பயணிகள் உற்சாகம்!
கோவை-ஜெய்ப்பூர் இடையிலான சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.. இது குறீத்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோவையில் இருந்து வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு 3-வது நாள் மதியம் 1.25 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்லும் சிறப்பு ரெயில் சேவை (வண்டி எண். 06181), வருகிற அக்டோபர் 16, 23, 30 நவம்பர் 6 ஆகிய தேதிகள் வரை (வியாழக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமார்க்கமாக, ஜெய்ப்பூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு 4-வது நாள் காலை 8.30 மணிக்கு கோவை வரும் சிறப்பு ரெயில் சேவை (06182) வருகிற அக்டோபர் 19, 26 நவம்பர் 2, 9 ஆகிய தேதிகள் வரை (ஞாயிற்றுக்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
