நெடுஞ்சாலையில் 100 வாகனங்கள் ஒன்றுக் கொன்று மோதல்... 6 பேர் பலி... 37பேர் படுகாயம்!

 
புழுதிப்புயல்

அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் அடிக்கடி சாண்ட் ஸ்டார்ம் எனப்படும்  கடுமையான புழுதிப்புயல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த நேரங்களில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் அதே இடத்தில் அப்படியே நிறுத்தப்படும். புழுதிப்புயல் மறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் சமயத்தில் தான் மீண்டும் வாகனங்கள் இயக்கப்படும்.

புழுதிப்புயல்

ஆனால் திடீர் புழுதிப்புயல்களால் சில நேரங்களில் அசம்பாவிதங்களும், விபரீதங்களும் ஏற்பட்டு விடுவதுண்டு. அந்த வகையில் அமெரிக்காவில் இன்று இலினாய்ஸ் மாகாணத்தில் கடுமையான புழுதிப்புயல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவு புயல் மேலெழும்பியது. சாங்கமன், மாண்ட்கோமெரி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு புழுதிப்புயல் சூழ்ந்தது.  இதனால் நெடுஞ்சாலைகளில் சுமார்  100க்கும் மேற்பட்ட கார், லாரி ஆகியவை ஒன்றுடன் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளாகின. இந்த விபத்துக்களில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புழுதிப்புயல்

அதில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 37 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அமெரிக்க வானியல் ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சில மணி நேரம் வரை  காற்றின் வேகம் மணிக்கு சுமார் 35 முதல் 45 கி.மீ. வரை இருக்கக் கூடும் எனவும், அதுவரை நெடுஞ்சாலைகளில் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web