பெண்ணுரிமை போற்றுவோம்... வேலு நாச்சியாருக்கு தவெக தலைவர் விஜய் மரியாதை!

 
விஜய்

 இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களை போரில் வீழ்த்தி முடிசூடிய பெண்மங்கை  ராணி வேலு நாச்சியார். சிவகங்கைச் சீமையின் அரசியான வீரமங்கை வேலுநாச்சியார்  பிறந்ததினம் இன்று. போர்க்களத்தில் வீழ்த்த முடியாத வீராங்கனையாகவும், நாட்டு மக்கள் நலனில் அதீத அக்கறை கொண்டிருந்த ஆட்சியாளராகத் திகழ்ந்த வேலுநாச்சியாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தவெக தலைவர் விஜய்.


இது குறித்து  தவெக தலைவர் விஜய்  “ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.  

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்” என பதிவிட்டுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web