செம... மின் ஏர் டாக்சி... 90 நிமிடப் பயணங்கள் இனி 7 நிமிடங்களில் ...!!

 
மின் ஏர் டாக்சி

உலகம் முழுவதும் தொழில்நுட்பம்   நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.  கைகளில் மொபைல் போனால் உலகம் சுருங்கி விட்டது. போக்குவரத்து பிரச்சனை தான் தீரவில்லை என புலம்புபவர்களுக்கு தீர்வு வந்தே விட்டது. என்ன தான் மேம்பாலங்கள், மெட்ரோ ரயில்கள் பல நகரங்களில் வந்துள்ள போதும் இவை ஓரளவுக்கு தான் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளன. இதன் அடிப்படையில் அடுத்ததாக தொழில்நுட்பம் போக்குவரத்து பிரச்சனைகளை தான் கையிலெடுத்து தீர்வு கண்டு வருகிறது. இந்தியா மிக விரைவில்  போக்குவரத்தில் பெரும் மாற்றங்களை சந்திக்க உள்ளது .  

மின் ஏர் டாக்சி


இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோவை ஆதரிக்கும் இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன்   இணைந்து  2026ல்   இந்தியாவில் அனைத்து மின்சார ஏர் டாக்ஸி சேவையைத் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சேவைகள்  ஆன்-ரோடு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன்  "செலவுக்குப் போட்டியாக" இருக்கும் என அந்நிறுவனங்கள் தெரிவித்தன. . 
இத்திட்டம் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம், கிரைஸ்லர் - ஸ்டெல்லாண்டிஸ், போயிங் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்றவற்றால் ஆதரிக்கப்படுகிறது.  ஏர் சேவை  மின்சாரத்தால் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதன் அடிப்படையில்  செங்குத்தாக புறப்பட மற்றும் தரையிறங்கூடிய  விமானங்களை உருவாக்குகிறது, அவை நகர்ப்புற காற்று இயக்கத்தின் எதிர்காலம் எனக் கூறப்படுகின்றன.

மின் ஏர் டாக்சி
இந்த 'மிட்நைட்' இ-விமானங்கள்  4 பயணிகளையும் ஒரு பைலட்டையும் 100 மைல்கள்  வரை கொண்டு செல்ல முடியும். இந்த சேவையானது 200 விமானங்களுடன் தொடங்கி, தேசியத் தலைநகரான டெல்லி, நாட்டின் நிதித் தலைநகரான மும்பை மற்றும் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என அழைக்கப்படும் பெங்களூரில் முதல் நிலையில் தொடங்கப்படும்.   தலைநகர் டெல்லியில் தற்போது காரில் சென்றால்  60 முதல் 90 நிமிட பயணங்கள் அனைத்துமே இந்த ஏர் டாக்சியில் வெறும் 7 நிமிடங்களில் சென்று விடலாம்.  அதே நேரத்தில் சரக்கு, தளவாடங்கள், மருத்துவம், அவசரகால மற்றும் பட்டய சேவைகளுக்கு இ-விமானத்தைப் பயன்படுத்தவும்  திட்டமிடப்பட்டு வருகிறது.   

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web